முதற்கண் மருத்துவர் திரு.அருண் குமார் அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்!!!
கருவாடு குறித்த மக்களின் அச்சத்தை போக்கியதற்கு மிகவும் நன்றி.
நண்பர்கள் மேலே உள்ள காணொளியில் செய்துள்ள கமெண்டுகளை பார்க்கும்போது,கருவாடு செய்முறை,அதன் சுகாதாரம் மற்றும் உப்பின் அளவு குறித்து நிறைய அயப்பாடுகள் எழுப்பி உள்ளனர்.
உங்கள் அனைவருக்கும் எங்களின் நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி!!! எங்கள் நிறுவணம் இராமநாதபுரம் மாவட்டம் தெற்குவாணி வீதி கிராமத்தை தலையிடமாக கொண்டு இராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் பகுதியில் இயங்கி வருகின்றது.
எங்களின் இந்த தொழிலை மேம்படுத்த NABARD மற்றும் தமிழ்நாடு அரசு எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இந்தியாவில் முதன் முதலாக அதிகாரபூர்வமாக ரயில் நிலையத்திற்குள் கருவாடு விற்பனை செய்தது எங்கள் நிறுவனமே ஆகும்.கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசின் ONE STATION ONE PRODUCT(OSOP) என்ற திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் முதன் முதலாக கருவாடு விற்பணை செய்யப்பட்டது .இந்தியாவில் கருவாடு விற்பனை செய்ய முதல் AC ஷோரூம் நிறுவியது எங்கள் நிறுவனமே ஆகும்.கடந்த பிப்ரவரி 12,2023 அன்று மதுரை ஜங்ஷன் இல் அது நிறுவப்பட்டது.





நாங்கள் சுமார் 30 வகையான கருவாடுகளை விற்பனை செய்து வருகின்றோம்.சில கருவாடு வகைகளை மட்டும் உப்பு சேர்க்காமலும் விற்பனை செய்து வருகின்றோம்.
மிகவும் சுகாதாரமான கருவாடு வாங்க விரும்பும் நண்பர்கள்,எங்களின் இணையதளம் மூலமாக ஆர்டர் செய்யலாம்!!!












































